Monday, 27 July 2020

*சுந்தர காண்டம்!* *பகுதி : 2*

*சுந்தர காண்டம்!*

 *பகுதி : 2*

*வாயு பகவான் எங்கு இருக்கிறாரோ பகவான் அங்கு இருக்கிறார். வாயு பகவானுடைய அனுக்ரஹம் சுக்ரீவனுக்குக் கிடைத்தது. ஹனுமனை நம்பிட ஜெயமே. ஹனுமனை நம்பியதால் சுக்ரீவனுக்கு ஜெயமே. என்னால் முடியும் என அனுமன் ஒருபோதும் சொன்னதில்லை. ஹரியே கர்த்தா என்பதில் எப்போதும் த்ருடமாக இருப்பவர். சுக்ரீவனைக் கொண்டு போய் இராமனிடம் ஒப்படைத்து விட்டு "இவன் உன்னிடம் சரணாகதி அடைந்து விட்டான். நீயே காப்பாற்ற வேண்டும். வாலியிடம் இருந்து நீயே காப்பாற்ற வேண்டும். ராஜ்ஜியத்தை பெற்றுத் தர வேண்டும்" என வேண்ட, இராமன் அனுக்ரஹம் செய்தார். "சீதாவைத் தேடிக்கொடு. வாலியை வதம் செய்து உனக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கிறேன்" என ராமர் அருள் புரிகிறார்!*

*ஹனுமந்தன். ஜாம்பவான் தலைமையில் நான்கு திக்குகளிலும் சீதையைத் தேடி கிளம்பினார்கள். தக்ஷிண திக்கில் தேடிக் கொண்டே மகேந்திர கிரி மலை வரை போகிறார்கள். என்ன செய்வது? கண்டுபிடிக்க முடியவில்லையே என்று. விசாரம் வருத்தம். ஒரு வருடம் கெடு. ஒரு மாதம் முடிந்து விட்டது. இரண்டு நாட்கள் தான் பாக்கி.. நல்ல குகை கிடைத்தது. மயனால் உருவாக்கப்பட்ட குகை. நம்பிக்கை இல்லை. திரும்பிப் போனால் சுக்ரீவன் கொன்று விடுவார். முன்னால் சென்றால் சமுத்திரம். குகையிலிருந்து காலம் கழித்து விடலாம். நல்ல காற்று ..நல்ல உணவு.. அனைவரும் ஒப்புக் கொண்டு உடன்படுகிறார்கள்*

*அப்போது ஹனுமான் "இராம காரியத்தை செய்ய வந்திருக்கிறோம்.பின்வாங்கக் கூடாது. உண்ணாவிரதம் இருக்க வேண்டும். ராமஜபம். இராம கதை சங்கீர்த்தனம் செய்து கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்கள். தீர்வு கிடைக்கும். இல்லை எனில் இந்த நாமம் சொல்லிக் கொண்டே உயிரைத் துறந்திடுவோம். நம்பிக்கை கொடுத்தார். என் பேச்சை நம்புங்கள்" எனக் கடமையை உணர்த்தினார்!*

*சம்பாதி பக்ஷி ஜடாயுவின் சகோதரன். சிறகொடிந்து கீழே கிடந்தது. சூரியனின் தேரோட்டி அருணனின் புத்திரன். ஜடாயு தசரதனுக்கு நண்பன். சீதையை இராவணன் கவர்ந்து சென்ற போது ஜடாயு சண்டை போடுகிறான். இராவணனை எதிர்த்து பிரயத்தனங்கள் செய்து, அடிபட்டு இறக்கும் தருவாயில் இராம தரிசனம் கிடைத்தது. தசரதனுக்கு அந்திம காரியங்கள் செய்ய முடியாத இராமன் ஐடாயுவுக்கு பண்றார். விஷ்ணு தர்மத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டும். நல்ல விஷயங்களில் ஆசைப்படுவதாலேயே பலன் கண்டிப்பாக கிடைக்கும்... பகவானின் கீதையின் வாக்கை விளக்கும் மத்வரின் வாக்கு !*

*ஜடாயுவின் தம்பி சம்பாதி பக்ஷி. சூரிய வெப்பம் தாங்காமல் இறகுகள் பிய்ந்தன. வானரங்கள் எல்லாம் இராம ஜெபம் செய்யச் செய்ய, அதனைக் கேட்ட மாத்திரத்தில் அத்தனை வருடங்களாக முளைக்காத சிறகுகள் முளைத்தன. நாம ஸ்மரணை நாம சங்கீர்த்தனம், ஸ்ரவணம், அதுவே ஆனந்தம் துக்க பரிகாரம். மேலே பறந்து கழுகுப் பார்வையால் மகேந்திர மலையில் இருந்து பார்க்கிறது. இலங்கையில் சீதாதேவி அசோகவனத்தில் ஸிம்ஸூபா மரத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிருக்கக் கண்டது. அங்கே போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்றது!.*

*யார் போவது? கலந்துரையாடல் நடந்தது.100  யோஜனை தூரம். ஜாம்பவான் மற்றும் அங்கதன் அவரவர்கள் தங்களால் முடியும் தூரத்தைக் கூற அனுமந்தன் பேசாமல் இருந்தார். ஒவ்வொருவரும் ஒரு யோசனை தாங்கி திரும்பும் நிலையில் இல்லை.*

*நானே செய்கிறேன் என்று கிளம்பி சென்றார் அனுமன். ராமபிரானின் அனுக்கிரகத்தினால் சாத்தியம். இந்த ரூபத்தில் போக முடியுமா? வளர்ந்து வளர்ந்து மகேந்திர மலையினை விட உயரமாக வளர்கிறார். விசுவரூபம். இராம ஜபத்தை சொல்லி கொண்டே பறக்கிறார். மகேந்திர மலையினை எம்பி அழுத்த கிரியின் பூமி கீழே போனதாம். சேஷ பகவான் ஆயிரம் தலைகளில் அவரின் முன் ஒரு தலையில் கடுகு போல் காணப்படும் பிரமாண்டத்தைத்  தாங்கிக் கொண்டு இருக்கிறார். சேஷ பகவானை கூர்மரூபி வாயு பகவானும், கூர்ம ரூபத்தில் உள்ள வாயு பகவானை கூர்ம ரூபத்தில் உள்ள ஸ்ரீ ஹரியும் தாங்கிக் கொண்டு இருக்கிறார் !*

*பறக்கிறார் மரங்கள் பக்ஷிகள் செடிகள் கொடிகள் எல்லாம்* *பின்னால் பறக்கிறது.*

*விக்னகங்கள் பல வந்தன.*
*பறந்து போகும் போது சமுத்திர ராஜன் தம் இருப்பிடத்திலுள்ள மைனாக பர்வதத்திடம் "அனுமந்தன் வருகிறார். நன்றிக் கடனை காட்ட வேண்டும்" என உணர்த்துகிறார்.* *மைனாகன் சிவனின் மைத்துனர். நம்மாலான சேவை செய்திட வேண்டும். முன்னொரு காலத்தில் பர்வதங்கள் எல்லாம் இரக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தன.  ரிஷிகளுக்கு இது தொந்தரவாக இருக்க,  இந்திரனிடம் புகார் செய்ய, வஜ்ராயுதத்தால் இறக்கைகளை வெட்டி விடுகிறார். எல்லா மலைகளையும் உட்கார வைத்து விடுகிறார்கள். மைனாத பர்வதம் வாயு பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டது. இந்த சமுத்திரத்தில் போய் இருந்து கொள். இந்திரன் வர மாட்டான் என அருள்புரிய, மைனாக பர்வதம் ரக்ஷிக்கப்பட்டது. இப்போது, வாயு பகவானே அவதாரமெடுத்து ஹனுமனாக இங்கே வர, இதற்கு பிரதி உபகாரமாக எழுந்து மேலே வந்தது, சிறிது இளைப்பாற வேண்டியது.*

*பல விதமான விக்னங்கள். 1. அன்புத் தொல்லையால் விக்கினங்கள்*
*2. தேவதைகள் பரீட்சை ரூபமான விக்கினங்கள். 3. கலிபுருஷன் முதலான தைத்தியர்களால் வரும் விக்னங்கள்!*

*மைனாக பர்வதம் எதிரே நின்றது. ருசியான பழங்கள் மூலிகைகள் தீர்த்தம் எடுத்து கொண்டு ஓய்வெடுக்க சொன்னது. எவ்வகையிலும் ராமனின் சேவையில் ஓய்வு கூடாது. எனக்குத் தேவையுமில்லை என மறுக்கிறார் ஹனுமான்.  ஏனென்றால் ஓய்வு எடுக்காமல் சேவை செய்யும் ஒருவர் முக்ய பிராணர். எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இடைவிடாது தினமும் 21600 முறை ஹம்ஸ ஸ்வாஸ ஜெபம் செய்பவர். வாயு பகவான் ஓய்வு எடுக்கமாட்டார். பிற தேவதைகள் கூட நம் தேகத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் ஓய்வெடுப்பர். முக்ய பிராணன் தூங்கும் போதும் ஓய்வு எடுப்பது இல்லை. வாயு பகவான் நம் தேகத்தில் இருந்து சுவாச ஜபம் செய்வதனால் பகவான் இருக்கிறார்!.*

*அனுமன் ஓய்வும் வேண்டாம். ஆயாசமும் இல்லை. ஆலிங்கனம் செய்து கொண்டார். மைனாகத்திற்கு அனுக்கிரகம் புரிந்தார் இந்திரன் பார்த்து இருப்பார். வாயு பகவான் ஸ்பர்ஷம் ஆனபிறகு எவரும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது என.... விடைபெற்றார் ஜீவோத்தமனான வாயு பகவான்...*

*காளிங்கன் யமுனை ஆற்றில் விஷம் கக்கினான். கருடனுக்கு பயந்து வந்தான். நர்த்தனமாடிய கிருஷ்ணன் நீ கிளம்பு என்கிறார். கருடன் உனை ஒன்றும் செய்ய முடியாது. என் பாத முத்திரைகள் தலையில் பதிந்து விட்டது. எமதூதனும் போய் விடுவான் என அருள் புரிந்தான் சர்வோத்தமனான ஸ்ரீ ஹரி...!*

*பறந்து போகும் போது ஸுரஸா எனும் நாகமாதா ஒரு பரீட்சை வைக்கிறார். வாயைத் திறந்தாலே அனைவரும் அதில் விழ வேண்டும். தேவதைகள் அனுப்பி வைத்த தேவதை என்று அனுமனுக்குத் தெரியும். விக்னம் தாண்ட வேண்டும். பெரிய ரூபமாகிறார். அவள் வாயைத் திறக்கிறாள். இன்னும் பெரிய ரூபம். வாயைத் திறக்கிறாள்!*

*பதிவுகள் தொடரும்*
🙏

ஸ்ரீ வித்யா பூர்ண தீர்த்தர்

*ஸ்ரீ வித்யா பூர்ண தீர்த்தர்!*

*வியாசராஜ மட பீடாதீஸ்வராய் இருந்தவர்!*
  
*இவர் காலம் 1824 to 1872 / 48 வருடம் பீடாதிபதியாக இருந்த மகனீயர்!*

*மூல பிருந்தாவனம் : ஸோஸலே!*

*ஆஸ்ரம குரு ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர்!*

*ஆஸ்ரம சிஷ்யர் ஸ்ரீ வித்யா சிந்து தீர்த்தர்!*

*மூல கோபாலகிருஷ்ணன் மற்றும் தன் குருவின் பரிபூரண அனுக்ரஹம் பெற்றவர்.  ஞானம், தபோசக்தி, ராஜாக்களிடம் நல்லுறவுக்கு பாத்திரமாகி இருந்தவர்!*

*தென்னிந்திய சஞ்சாரங்கள் போது, அதற்குத் தேவையான. அனைத்து வசதிகளையும் ராஜாக்கள் அவருக்கு செய்து தந்தார்கள். 1859ல் சஞ்சாரம் செய்த போது, அவருடைய பரிவாரம் எப்படி இருந்தது என்பதை அரசாங்கம் சாசனம் செய்துள்ளது. ரத கஜ மற்றும் பல படைகள்,  பரிவாரங்கள், வீரர்கள் கொண்டு கொற்றக் குடையின் கீழ் அவரது சஞ்சாரம் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. அனைத்து பொருளுதவிகளும் ராஜா மும்முடி கிருஷ்ணராஜ உடையர் மடத்தின் மேல் கொண்டுள்ள பக்தியால் சமர்ப்பித்தார். அவர் சேர்த்த நிறைய ஸம்பத்துக்கள் பிற்காலத்தில் ஒரு பெரிய  சத்விஷயத்திற்க்கு உபயோகப்பட்டது!*

*இவருடைய குரு ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர் பட்டத்தில் இருந்தது 48 நாட்களே. ஆனால் தன் சிஷ்யர் ஸ்ரீ வித்யா பூர்ண தீர்த்தருக்கு 48 வருடம் இருக்கும் படியான பாக்கியத்தையும் ஆசி அனுக்கிரஹத்தையும் தந்தார்!*

*இவருடைய சிஷ்யர் ஸ்ரீ வித்யா சிந்து தீர்த்தர் காலத்தில் மிக மோசமான பஞ்சம் நிலவியது. அரசாங்க கஜானா கூட காலியாகி விட்ட நிலையில் அப்போது இவர் மட சிஷ்யர்களை அனுப்பி கேரளா போன்ற மற்ற பிராந்தியங்களுக்கு அனுப்பி தன்னிடமிருந்த 1000 கிலோ தங்கத்தை தானியமாற்று செய்து அதனை ஜாதிமத பேதங்கள் பார்க்காமல் மைசூர் சுற்று வட்டார பிராந்தியத்தவர்கள் அனைவரின் பசிகளை போக்கி அன்னதானம் செய்தார். அதற்கு அவரை அக்கி பேளே ஸ்வாமிகள் என்றே அழைத்தனர். இந்த மாதிரி ஒரு காலகட்டம் வருவதையும், அதற்கு வியாசராஜமடம் உதவும் என்பதையும், இவரில் இருந்து நான்கு பேருக்கு முன்னால் பட்டத்தில்  இருந்த ஸ்ரீ வித்யா வல்லப தீர்த்தர் என்ற  பீடாதீஸ்வர் சொல்லிவிட்டுப் போயிருந்தார்!*

*இவருடைய இன்னொரு சிஷ்யர் சுப்பராய தாஸரு அவருக்கு கோபால உடையரு என்ற நாமகரணம் செய்து ஸன்யாஸ ஆஸ்ரமத்தைக் கொடுத்தார். அவர் பிடி சன்னியாசியாக இருந்தவர். இவர் பூர்வாஸ்ரமத்தில் ராஜா மும்முடி கிருஷ்ணராஜாவுடன் சொக்கட்டான் விளையாடும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர். தீடிரென பகவானின் சூசனையின் பேரில் விரக்தி வைராக்கியம் ஏற்பட்டு சன்யாசம் ஏற்றுக் கொண்டவர்!*

*வியாச ராஜர் காலத்தில் இருந்த செழிப்பை 18 ஆம் நூற்றாண்டில் கண்முன் கொண்டு நிறுத்தியவர் ஸ்ரீ வித்யா பூர்ண தீர்த்தர்!*

*1872 ல் ஸ்ராவண மாதம் சுக்லபட்ச சஷ்டியில் ஸோஸலேயில் பிருந்தாவனஸ்தர் ஆகிறார்!*

*அவருடைய நாம ஸ்மரணை செய்தால் ஞானம் பக்தி வைராக்கியம் மற்றும் அவர் மாதிரி தான தர்ம சிந்தனைகளும் மார்க்கங்களும்  கிடைக்கும்!*

*ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து!*


🙏🙏🙏

Sunday, 26 July 2020

Happy Life

எளிமையான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி ..

கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு...

சட்டைக்குள் போட்ட ஐஸ் கட்டி...

Belt போட்டு இறுக்கி கட்டிய வேட்டி...

மொட்டமாடி தூக்கம் ..

திருப்தியான ஏப்பம்...

கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை...

நாம் செய்யும் மொக்க மேஜிக்கை வியந்து ரசிக்கும் குழந்தை..

7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி..

பாட்டியிடம் பம்பும் தாத்தா ...

தலைவர் படம் First day first show ticket கிடைத்தவுடன் விடும் பெரும்மூச்சு ...

First sip of bed coffee....

தாகம் தனித்த boring pipe தண்ணி ..

Notebookன் கடைசிப்பக்கம்...

கொழுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத makeup இல்லா
அழகி ...

பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத ஆசிரியர் ...

தூங்க தோள் கொடுத்த சக பயணி ....

எரிந்து முடிந்த computer சாம்பராணி ..

பாய் வீட்டு பிரியாணி ..

பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பாலிய நண்பன்..

இப்பவும் டேய் என அழைக்கும் தோழி ..

இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா ...

கோபம் மறந்த அப்பா..

சட்டையை ஆட்டய போடும் தம்பி..

அக்கறை காட்டும் அண்ணன்..

அதட்டும் அக்கா ...

மாட்டி விடாத தங்கை ..

சமையல் பழகும் மனைவி ...

Sareekku fleets எடுத்துவிடும் கணவன்..

இதுவரை பார்திராத பேப்பர் போடும் சிறுவன்..

Horn அடித்து எழுப்பிவிடும் பால்காரர்...

வழிவிடும் ஆட்டோ காரர்...

High beam போடாத lorry driver...

ஊசி போடாத doctor..

சில்லறை கேட்காத conductor..

சிரிக்கும் police...

முறைக்கும் காதலி..

கை பிடித்து சாலையை கடக்கும் காதலன் ...

முகத்தில் அறைந்து , மூடிட்டு உக்கார்ரியா இல்ல மிதிக்கட்டுமா என கடுப்பாகும் நண்பன் ...

உப்பு தொட்ட மாங்கா..

அரை மூடி தேங்கா..

12மணி குல்பி..

Atm a / c ..

sunday சாலை ...

மரத்தடி அரட்டை...

தூங்க விடாதா குறட்டை...

புது நோட் வாசம்..

மார்கழி மாசம்..

ஜன்னல் இருக்கை..

தும்மும் குழந்தை..

கோவில் தெப்பகுளம்..

Exhibition அப்பளம்..

ராட்டன் தூறி kerchief விளையாட்டு..

முறைபெண்ணின் சீராட்டு ...

எதிரியின் பாராட்டு..

தோசக்கல் சத்தம் ..

எதிர்பாராத முத்தம் ...

பிஞ்சு பாதம்..

அரிசீம்பருப்பு சாதம் ..

இதை எழுதும் நான்..

படிக்கும் நீங்கள்..

இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..

வாழ்க்கைய வெறுக்க high heels அளவுக்கு பெருசா 10 காரணம் இருந்தாலும்

அதை ரசிக்க , mini meals மாதிரி வெரைட்டியான விஷ்யங்கள் நிறைய இருக்கு ..

அதையெல்லாம் water tank அளவுக்கு வாய திறந்து ரசிக்கனும்னு இல்ல ...

water packet அளவுக்கு மனச திறந்து ரசிச்சாலே போதும்....

கவலை காலி ஆய்ரும்
வாழ்க்கை ஜாலி ஆய்ரும்
Face fresh ஆய்ரும்

...SO... So be happy..

😊😊😊..

Bhagavad Geeta

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.....

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
13. அவ்வப்போது பரிசுகள் அளி.
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.

சுந்தர காண்டம்

*சுந்தர காண்டம்:*

*பகுதி : 01*

*பகவானின் அவதாரங்களில் விசேஷமான அவதாரம் ராம அவதாரம்!*

*முன் மாதிரி உதாரணமாக இருந்தவர் ராமர். தான் செய்வதைப் பார்த்து ஜனங்கள் பல சத்விஷயங்களை செய்ய வேண்டும் என்பதற்காக எடுத்த அவதாரமிது. ஒரு ஜீவன் பிறந்தது முதல் கடைசி வரை எப்படி வாழ வேண்டும் என்று கற்பித்துக் கொடுத்த அவதாரமிது.!*

*மாதா பிதா பக்தி, சகோதரர் பாசம், எளிமை, சிநேக பாவம், குரு பக்தி, ஏக பத்தினி விரதம், அடைக்கலம் அடைந்தவர்களைக் காப்பாற்றுதல் ஆகியனவைகளை கற்றுக் கொடுத்த அவதாரம்!*

*மூல ராமாயணத்திலிருந்து வந்தது வால்மீகி ராமாயணம். மூல ராமாயணம் என்பது 100 கோடி சுலோகங்களை உடையது. அது ஹயக்ரீவ ரூபி பரமாத்மாவினால் வாயு பகவானுக்கு உபதேசம் செய்யப்பட்டது. பின்னர் வால்மீகி முனிவர் பகவானின் அனுக்கிரகத்தால் எழுதிய ராமாயணத்தில் 7 காண்டங்களாகப் பிரித்து கொடுத்துள்ளார்!*

*1. பால காண்டம்*
*2. அயோத்தியா காண்டம்*
*3. ஆரண்ய காண்டம்*
*4. கிஷ்கிந்தா காண்டம்*
*5. சுந்தர காண்டம்*
*6. யுத்த காண்டம்*
*7. உத்தர காண்டம்*

*ஒரு ஜீவனுக்கு முக்கியமானது ஹ்ருதயம். அதுபோலவே இராமாயணத்தில் முக்கியமான காண்டம் சுந்தர காண்டம். முழுக்க முழுக்க அனுமந்தனைப் பற்றியது. இராமாயணம் என்பது இராமனுடைய நாடகம். இராமாயணத்தில் சுந்தர காண்டம் என்பது ஒரு திருப்புமுனை!*

*சுந்தர காண்டத்தில் வருகின்ற ராமன், சீதை, அனுமன், வனம், கதாபாத்திரங்கள் எல்லாமே அழகு என வர்ணிக்கப்படுகிறது!*

*சுந்தர காண்டம் எப்படி இராமாயணத்தில் ஒரு திருப்புமுனையாக உள்ளதோ, சுந்தர காண்டத்தை ஸ்ரவணம் கீர்த்தனம் பாராயணம் செய்தாலே,  வாழ்வில் திருப்புமுனை ஏற்படும்.!*

*ஸ்ரீ ராகவேந்திரரின் ப்ராத சங்கல்ப கத்யத்தில் வாயு பகவானுக்கு 32 லட்சணம் உள்ளது என்று சொல்கிறார். அந்தளவுக்கு சுந்தரமான அனுமனைப் பற்றியே முழுவதும் உள்ளதால் இதற்கு சுந்தர காண்டம் என்னும் பெயர் வந்திருக்கலாம்.!*

*அனுமார் ராமர் மேல் காட்டிய பக்தி, அனுமாரின் பிராபாவம், விவேகம், வேகம், பவ்யம்,  வாக்கு வன்மை அனைத்தும் சுந்தர காண்டத்தில் காணலாம்!*

*புத்திர் பலம் யசோ தைர்யம்*
*நிர்பயத்வம் அரோ கதா!*
*அஜாட்யம் வாக்படுத் வம்ச*
*ஹனூமத் ஸ்மரணாத் பவேத்!*

*என்ற ஸ்மரணயே மிகவும் விசேஷமாகி அனைத்தும் தரவல்லது.!*

*ராமச்சந்திர மூர்த்தி அகஸ்தியரிடம் சொல்கிறார், என் முதல் சந்திப்பில் தான் அனுமந்தனுடன் பேசும் போது ஒரு அக்ஷரத்தில் கூட தவறிருக்காது. எல்லாம் புரிந்து கொள்ளும் வகையில் ஏற்புடையதான நுணுக்கம் இருக்கும். இவ்விதமாக  ராமனாலேயே ஏற்பட்ட பாராட்டுகளை பெற்றவர் அனுமன். அவரின் மறு அவதாரமான மத்வாச்சாரியரும் 37 கிரந்தங்கள் எழுதியுள்ளார். விசேஷமான வாக்வண்மை இருந்தது.!*

*சுந்தரருடைய சுந்தர காண்டம். வாயுபகவான் எப்படி அனுமந்தராகவும், பின்னர் மத்வாச்சாரியாராகவும் அவதாரம் செய்தார். இரண்டாவதாக மத்வர் பத்ரிகாஸ்ரமம் போன போது, வேதவியாசரிடம் மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தை செய்ய ஒப்புதல் வாங்கி வந்தார்!*

*நமக்கு ஏற்படும் குழப்பமான கட்டத்தில், 32 அத்தியாயம் கொண்ட இம் மகாபாரத தாத்பர்ய நிர்ணயம்  நிவாரணமாகிறது. இதில் 4 முதல் 9 வரையுள்ள அத்தியாயங்களில் ராமாயணத்தின் சாரத்தை, அதுவும் நமக்கு ஏற்படும் சாஸ்திர ரீதியான குழப்பங்களை சரிசெய்யும் வகையில் நிர்ணயம் செய்து உள்ளார். அதில் 7 வது அத்தியாயம் சுந்தர காண்டமாகும். !*

*எந்தவொரு அனுமன் இலங்கைக்கு போய் துவம்சம்  செய்து சீதையிடம் மோதிரத்தை ஒப்படைத்து, சீதையின் சூடாமணியை வாங்கி வந்து ராமனிடம் கொடுத்தாரோ, அவரே மத்வராகி மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தை எழுதியது உண்மையானது சத்தியமானது!*

*பதிவுகள் தொடரும்!*

Friday, 19 June 2020

தைராய்டால அவதியா? இதோ உங்களுக்கு உடம்ப குறைக்க செம டயட் டிப்ஸ்


நம் உடலில் தைராய்டு ஹார்மோன் சீராக இல்லை என்றால் நம்முடைய உடல் மெட்டா பாலிசம் பாதிப்படைய ஆரம்பித்து விடும். இதனால் உடல் எடை அதிகரிப்பு ஏற்படலாம். தைராய்டு ஹார்மோனால் ஏற்படும் உடல் எடையை குறைக்க சில டயட் உணவுகள் நம்மளுக்கு உதவுகின்றன. எந்த மாதிரியான உணவுகள் நம்முடைய தைராய்டு ஹார்மோனை சீராக இயக்க உதவுகிறது வாங்க தெரிஞ்சுக்கலாம்

 
samayam tamil
நிறைய பேருக்கு எடை போட ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மட்டும் காரணமாக இருப்பதில்லை. தைராய்டு பிரச்சினையும் காரணமாக அமைகிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றம் நம் உடல் எடையை பாதிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஹைப்பர் தைராய்டிசம் நம் உடல் எடையை குறைத்து விடுகிறது. இதுவே ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவரின் உடல் எடை அதிகரிக்கிறது. எனவே ஹைப்போ தைராய்டிசம் கொண்ட நபர்களின் உடல் எடை வேகமாக அதிகரிக்க ஆரம்பித்து விடும். இதனால் கொஞ்ச நாட்களிலேயே இவர்கள் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள்.

​அதிக உடல் எடை

samayam tamil
இந்த உடல் எடை அதிகரிப்பை குறைக்க அவர்கள் உடற்பயிற்சி செய்தால் கூட பலன் என்னவோ கிடைப்பதில்லை. அதற்குத்தான் உங்க தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தி அதே நேரத்தில் உடல் எடையை குறைக்கும் 9 விதமான டயட் உணவுகளை உங்களுக்கு வழங்குகிறோம்.
இந்த 9 உணவுகளையும் நீங்கள் எடுத்துக் கொண்டு வரும் போது உங்க தைராய்டு ஹார்மோன் செயல்பாடு ஒழுங்காக இருப்பதோடு உடல் எடையையும் குறைக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

​ஹைப்போ தைராய்டிசம்

samayam tamil

ஹைப்போ தைராய்டிசம் என்பது உங்க உடல் மெட்டா பாலிசத்தை மெதுவாக்கி விடும். எனவே தான் இந்த பாதிப்பு உடையவர்கள் உடல் எடை குறைப்பு, மன அழுத்தம் நீங்க மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் போன்ற முறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனவே உங்க தைராய்டு பிரச்சினையால் உடல் எடையை குறைக்க விரும்பினால் உங்களுக்கான 9 டயட் முறைகள் இதோ.

​சரியான கார்போஹைட்ரேட் உணவுகளை தேர்வு செய்யுங்கள்

samayam tamil

தைராய்டு சுரப்பி தான் நம் உடலை சரியான சமநிலையில் வைக்க உதவுகிறது. எனவே கார்போஹைட்ரேட் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது மிதமான தன்மை வேண்டும். அதிகமாகவோ குறைவாகவோ எடுத்துக் கொள்ள கூடாது.
முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட மாவு, சர்க்கரை, பசைய உணவுகளை தவிர்ப்பது நல்லது.

​தாதுக்கள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்

samayam tamil

நம் உடலில் உள்ள தைராய்டு சுரப்பி சரியாக செயல்பட அயோடின் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் அவசியம். இந்த தாதுக்களில் குறைபாடு ஏற்படும் போது நமக்கு தைராய்டு பிரச்சினை உண்டாகிறது. எனவே நோரி கடற்பாசி, கொம்புச்சா, சிவப்பு கடற்பாசி மற்றும் கடற்பாசி போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் சூப்பாகவோ, சாலட்டாகவோ சமைத்து சாப்பிடலாம். செலினியம் உணவுகள் : பிரேசில் நட்ஸ், காளான்கள், சியா விதைகள் போன்றவற்றில் செலினியம் காணப்படுகிறது.

​அதிகம் புளித்த உணவுகளை உண்ணுங்கள்

samayam tamil

புளித்த உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நம்முடைய குடல் ஆரோக்கியம் தைராய்டு ஆரோக்கியத்தையும் தருகிறது. 1 டேபிள் ஸ்பூன் தயிர், கிம்ச்சி, கொம்புச்சா மற்றும் கெஃபிர் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது உங்க குடல் ஆரோக்கியத்திற்கும் அதே நேரத்தில் தைராய்டு செயல்பாட்டிற்கும் உதவும்.

​பச்சை இலை காய்கறிகள்

samayam tamil

ப்ரோக்கோலி, போக் சோய், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், காலார்ட் கீரைகள் மற்றும் கீரைகள் போன்ற பச்சை இலை காய்கறிகளை உண்ணுங்கள். இதுவும் உங்க தைராய்டு ஹார்மோன் சிறப்பாக செயல்பட உதவும்.

​நல்ல கொழுப்பு உணவுகள்

samayam tamil

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்க தைராய்டு ஹார்மோன் சமநிலையில் வைக்க உதவுகிறது.
வால்நட்ஸ், சியா விதைகள், ஆளி விதைகள், சாலமன், சார்டைன்ஸ், மாக்கொரல் போன்ற மீன் வகைகளை சேர்த்து கொள்ளுங்கள்.

​புரோட்டீன் உணவுகளை உட்கொள்ளுங்கள்

samayam tamil

புரோட்டீன் அதிகமான உணவுகளான முட்டை, சிக்கன், மீன், பருப்பு வகைகள், நட்ஸெ மற்றும் விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதே நேரத்தில் பால் பொருட்களில் இருந்து விலகி இருங்கள். ஏனெனில் பசையம் மற்றும் பால் உணவுகளில் உள்ள புரோட்டீன் அமைப்பு உங்க தைராய்டு ஹார்மோனை பாதிக்கலாம்.

​வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவுகள்

samayam tamil

நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், சாலட், ஸ்மூத்தி, புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்க உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து தைராய்டு பிரச்சினையால் ஏற்படும் உடல் எடையை குறைக்க உதவும்.

​போதுமான அளவு விட்டமின் டி தேவை

samayam tamil

விட்டமின் டி ஆட்டோ இம்பினியூ டிஸ்ஆர்டர்யை போக்குகிறது. அந்த வகையில் தைராய்டு பிரச்சினையும் ஒரு ஆட்டோ இம்பினியூ டிஸ்ஆர்டர் ஆகும். எனவே விட்டமின் டி அடங்கிய உணவுகளான சாலமன், டூனா, மாக்கொரல் போன்ற மீன் வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். வேண்டும் என்றால் மருத்துவரின் பரிந்துரை பேரில் டி3 மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அதிகாலை சூரிய ஒளியில் நின்று விட்டமின் டியை பெறலாம். விட்டமின் டி உங்க தைராய்டு ஹார்மோன் ஒழுங்காக செயல்பட உதவுகிறது.

​ஜிங்க் நிறைந்த உணவுகள்

samayam tamil

ஜிங்க நம் உடலில் தைராய்டு ஹார்மோன் சீரான அளவில் இருக்க உதவி செய்கிறது. எனவே ஜிங்க் நிறைந்த உணவுகளான மாட்டிறைச்சி, இறால், சிறுநீரக பீன்ஸ், கீரை மற்றும் ஆளி விதைகள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
மேற்கண்ட டயட் உணவுகள் தைராய்டு பிரச்சினையால் ஏற்படும் உடல் எடையை குறைக்க உங்களுக்கு உதவியாக இருக்கும்.

பாட்டி வைத்தியம்: ஜலதோஷம், மூக்கு ஒழுகுதா?... பத்தே நிமிஷத்துல சரியாகிடும்....

samayam tamil


ஜலதோஷம், மூக்கு ஒழுகுதல் வந்தால் மிக அசளகரியமாக உணர்வோம். அதிலும் இந்த மழை மற்றும் குளிர்காலம் வந்தால் போதும், காலையில் தூங்கி எழுந்ததும் 10 முறையாவது தும்மல் வந்துவிடும். இதற்கெல்லாம் மருத்துவரிடம் போனால் என்னாவது?... இதுபோன்ற பருவநிலை மாற்றங்களால் ஏற்படுகிற உபாதைகளுக்கு வீட்டிலேயே சின்ன சின்ன கைவைத்தியங்களைச் செய்து கொண்டால் போதும். அப்படி 10 நிமிடத்தில் ஜலதோஷத்தைப் போக்கக்கூடிய கைவைத்தியம் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

ஜலதோஷம், இருமல்

samayam tamil
பனிக்காலம் துவங்கிவிட்டது. அதனால், மக்கள் பலரும் இருமல் தும்மல் ஜலதோஷம், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர். வெயில் காலத்திலிருந்து திடீரென்று குளிர்காலத்திற்கு மாறும்பொழுது ஜலதோஷம் வருவது இப்பொழுது ஒரு சகஜமான சூழ்நிலை. ஆனால் நம் அன்றாட வாழ்வில் இருமல் மூக்கடைப்பு சளி போன்ற உபாதைகள் இருந்தால் வெளியில் சென்று வேலை பார்ப்பது மிகவும் கடினம்.

​வேலையே ஓடாது

samayam tamil 
குறிப்பாக ஜலதோஷம் இருக்கும் பொழுது ஏசியில் வேலை பார்ப்பது மிகவும் கடினம். அதேபோல் வெயிலில் அலைந்து வேலை பார்ப்பதும் கடினம். இரவு தூங்கும் போது மூக்கடைப்பு ஏற்பட்டு தூக்கமின்மை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் நாம் இருமும் பொழுதும், தும்மும் பொழுதும், நம் அருகில் உள்ளவர்களுக்கும் நமது ஜலதோஷம் தொற்றி விடும் அபாயம் உள்ளது. உடலில் உள்ள எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருந்தால் இதைப்போல் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் ஜலதோஷத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

​​என்ன செய்யலாம்?

samayam tamil 
ஒருவேளை உங்களுக்கு ஜலதோஷம் ஏற்பட்டால் அதிலிருந்து உடனடியாக விடுபட ஒரு அற்புதமான மருந்து ஒன்றைத் தயாரிப்பதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி, இலவங்கப்பட்டை, நட்சத்திர சோம்பு, தேன், ஆப்பிள் சீடர் வினிகர் எலுமிச்சை பழம் மற்றும் தண்ணீர்.
நம்முடைய வீடுகளில் எப்போதும் இருக்கும் இந்த சின்ன சின்ன பொருள்களை வைத்தே செலவில்லாமல் உங்களுடைய இருமல் மற்றும் ஜலதோஷத்துக்கான மருந்தை நீங்களே தயார் செய்து கொள்ளலாம். அது எப்படி என்று பார்க்கலாம்.

​ஜலதோஷத்தை விரட்டும் பானம்

samayam tamil 
ஒரு நான்கு அங்குலம் அளவுள்ள இஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்றாகக் கழுவவேண்டும். பின்பு தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் நான்கு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்பு அதில் நாம் வைத்திருந்த இஞ்சி துண்டு. இரண்டு இலவங்கப்பட்டை துண்டுகள் மற்றும் இரண்டு நட்சத்திர சோம்பு இவை மூன்றையும் போட்டு ஒரு பத்து நிமிடம் நன்றாகக் கொதிக்கும் வரை சூடு செய்ய வேண்டும்.
பின்பு அதை இறக்கி ஒரு கப்பில் தேவையான அளவு ஊற்றி நன்றாகக் கலக்கி விட வேண்டும். பின்பு 2 மேசைக்கரண்டி தேன் எடுத்து அதில் ஊற்றி நன்றாகக் கலக்கிக் கொள்ள வேண்டும்.
இறுதியாக அதில் ஒரு பாதி நறுக்கிய எலுமிச்சம்பழத்தை பிழிய வேண்டும். ஜலதோஷத்தைப் போக்கக் கூடிய அற்புதமான நிவாரணி பத்து நிமிடத்தில் தயார்.

​எப்படி குடிக்க வேண்டும்?

samayam tamil 
இந்த பானத்தை சூடாகவும் அல்லது சற்று வெதுவெதுப்பாகவும் கூட குடிக்கலாம். ஆனால், காலையில் தயாரித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு, மாலைளோ இரவோ சூடுசெய்து குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஜலதோஷம் இருமல் போன்றவை அதிக குளிர் தன்மையிலேயே வருகின்றது. அதாவது உடலில் உள்ள வெப்பம் உள்ளிருக்கும் குளிர்ந்த சளியை வெளித்தள்ள முயற்சிக்கும் செயல் தான் அது. எனவே முடிந்தவரைக் குளிர்பானங்கள் ஐஸ்கிரீம், மருந்தாகவே ஆனாலும் அதைக் குளிர் செய்து குடிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதமான சூட்டில் அருந்தினால் மிகவும் நல்லது. தினமும் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் அருந்தி வந்தால்,பொதுவாக ஏழு நாட்கள் வரை இருக்கும் மோசமான ஜலதோஷம் கூட ஓரிரு நாட்களில் முற்றிலும் குணமடைந்து விடும்.

​இது எப்படி வேலை செய்கிறது?

samayam tamil 
பொதுவாகவே நம் அனைவருக்கும் இருக்கக்கூடிய கேள்வி இதுதான். குறைந்தது ஏழு நாட்கள் நம்மைப் பாடாய்ப்படுத்தி விட்டுத் தான் செல்வேன் என்று அடம் பிடிக்கும் ஜலதோஷம், மூக்கடைப்பு இந்த பானத்தைக் குடித்தால் மட்டும் உடனே சரியாகிவிடுமா என்ற சந்தேகம் தான். ஆனால் ஓரிரு நாட்களில் முற்றிலும் சரியாகி விட வாய்ப்பு அதிகம். ஏனென்றால் இஞ்சி மற்றும் இலவங்கப் பட்டையில் இயற்கையாகவே நமது எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் உள்ளது. அதனுடன் தேன் மற்றும் நட்சத்திர சோம்பு சேரும்பொழுது அதிலுள்ள பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ஒரு காரணி சேரும்பொழுது நமது பிரச்சனை மிக விரைவில் குணமடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

​எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்?

samayam tamil 
இந்த அற்புத நிவாரணி இரண்டு நாட்கள் வரை அறையில் சாதாரண வெப்ப நிலையிலேயே வைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதன் செய்முறை மிக எளிமையாக உள்ளது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். அதனால் தினமும் 2 நிமிடம் செலவு செய்து இந்த பானத்தைப் புதிதாகத் தயாரித்து குடிப்பது இன்னும் கூடுதலாக உங்களுடைய ஜலதோஷத்தை உடனடியாகவும் வேகமாகவும் விரட்டியடிக்க உதவும்.

Monday, 11 September 2017

குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா !


குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா !

உணவூட்டுதல் ,அரைஞாண் கயிறு கட்டுதல்.
ஒரு குழந்தையை தனித்துவமாக அழைக்கவும், அடையாளம் காண்பிக்கவும் பெயர் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒருவருக்கு வைக்கும் பெயர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. குழந்தைக்கு பெயர் சு ட்டுவதை நாம் ஒரு சடங்காக கொண்டாடுகிறோம். இந்த பெயர் சு ட்டும் விழாவானது தமிழர்களால் எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
ஓர் குழந்தை பிறந்த தினத்திலிருந்து 16ம் நாள் இந்த பெயர் சு ட்டும் விழாவானது கொண்டாடப்படுகிறது. 16ம் நாள் வைக்க முடியாதவர்கள் 10ம் நாள் அல்லது 12ஆம் நாட்களிலும், அல்லது அடுத்து வரும் ஏதேனும் ஒரு சுப தினங்களிலும் பெயர் சு ட்டும் விழாவானது வைக்கப்படுகிறது. குழந்தைக்கு பெயர் சு ட்டுவதற்காக நாள் நட்சத்திரம் அனைத்தும் பார்த்து உறவினர்கள் அனைவரையும் அழைக்கின்றனர்.
பெயர் சு ட்டும் விழா அன்று குழந்தைக்கு புத்தாடை அணிவித்து குழந்தையின் தாயாரும், தகப்பனாரும் மூன்று முறை குழந்தையை மாற்றிக் கொள்வர். அதன்பின் குழந்தையை தந்தையின் மடியில் வைத்து ஒரு தாம்பு லத்தில் புழுங்கலரிசியை நிரப்பி, ஓர் விரலி மஞ்சளை எடுத்து குழந்தைக்கு வைக்கும் பெயரை மூன்று முறை எழுத வேண்டும். சில குழந்தைகளுக்கு தாய் அல்லது தாய் வழியில் இருக்கும் பெரியவர்களின் பெயரை வைக்கின்றனர், அல்லது சில குழந்தைகளுக்கு கடவுள் பெயர்களையும் சு ட்டுகின்றனர்.
பிறகு குழந்தையின் தாய், தந்தையோ அல்லது தாய், தந்தைவழி பெரியவர்களோ குழந்தைக்கு பெயரிடலாம். குழந்தையின் வலது காதில் மூன்று முறை மெல்லிய குரலில் பெயரை உச்சரித்து தொட்டிலில் இடுவர். பின் குழந்தையின் அத்தை முறையில் இருப்பவர்கள் மற்றும் உறவினர்கள் வளையல், கழுத்து சங்கிலி அணிவித்து மகிழ்வர்.
குழந்தைக்கு உணவூட்டுதல் :
முதல் முறையாக குழந்தைக்கு உணவு ட்டுவதை தமிழர்களால் விழாவாக கொண்டாடப்படுகிறது. குழந்தைக்கு முதலில் உணவு ஊட்டும் போது சர்க்கரை பொங்கல், பாயாசம் போன்ற ஏதேனும் ஓர் இனிப்பு சுவை கொண்ட உணவுகளை செய்து குழந்தையின் அத்தை அல்லது தாய் தந்தை வழி சொந்தங்களில் யாரேனும் ஒருவரால் இந்த சடங்கானது செய்யப்படுகிறது. இந்த சடங்கானது வீடு அல்லது கோவில்களிலும் செய்யப்படுகிறது.
அரைஞாண் கயிறு அணிவித்தல் :
குழந்தைக்கு ஐந்தாவது மாதத்தில் வெள்ளி அரைஞாண் கயிற்றை கட்டலாம். அரைஞாண் கயிற்றுடன் கருகமணி, செப்புக்காசு சேர்த்து கட்டினால், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. சுப திதிகள், சுப லக்னத்தில் அரைஞாண் கயிறு அணிவித்தால், குழந்தை ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்கும்.

♥தமிழர்களின் சடங்குகளும் திருவிழாக்களும் !






தமிழர்களின் சடங்குகளும் திருவிழாக்களும் !

ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நிலைகளை தாண்டி வருகின்றனர். அவரவர்களின் சமயம் மற்றும் சந்தர்ப்பங்களுக்கு தகுந்தாற்போல் பல்வேறான சடங்குகளை தமிழர்கள் கடைபிடித்து வருகின்றனர். சடங்குகள் பொதுவாக அனைத்து உறவினர்களையும் அழைத்து நடத்தி வருகிறோம். சில சடங்குகள் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது.

மனிதர்களின் வாழ்வோடு சம்பந்தமான குழந்தை பிறப்பு, பெயர் வைத்தல், காது குத்துதல், திருமணம் போன்றவை நடத்துகிறோம். மனிதர்களின் தேவைகளின் அடிப்படையில் வாகனம் வாங்குதல், வீடு கட்டுதல், தொழில் தொடங்குதல் போன்றவற்றிற்கும் பல சடங்குகளை நாம் செய்து வருகிறோம். இந்த சடங்குகளை மேற்கொள்வது நம் உறவினர்களோடு மகிழ்ச்சியாக இருக்கும் விதமாகவும் அமைகிறது. தமிழர்கள் செய்யும் சடங்குகள் மற்றும் விளக்கங்களை பார்ப்போம்.



தேனை  தொட்டு வைத்தல் !

குழந்தை பிறந்தவுடன் தேனை  தொட்டு வைத்தல் தமிழர்களின் சடங்குகளில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தேனை  தொட்டு வைத்தல் என்பது பிறந்த குழந்தையின் நாவில் இனிப்பு சுவையுடைய நீர்மத்தை வைக்கும் ஓர் சடங்காகும். தேனை  வைக்க தேன் அல்லது இனிப்பு சுவை கொண்ட தண்ணீரை வைக்கின்றோம்.

தேனை  தொட்டு வைக்க காரணம் என்ன?

தேனை  என்ற சொல்லிற்கு புத்தி என்பது அர்த்தம். தேனை  தொட்டு வைக்கும் பெரியவர்களின் நற்குணத்தினை அக்குழந்தையும் பெற்று சமூகத்தில் உயர்ந்து நிற்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த சடங்கினை நாம் செய்கிறோம்.

யார் இந்த சடங்கினை செய்யலாம்?

இந்த சடங்கினை அந்த குழந்தையின் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். சில சமயங்களில் அவர்களின் வாழ்க்கை முறையை வைத்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. குழந்தைகளின் தாய்மாமாவிற்கே இதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதன்பின் அதிகப்படியான இன்பங்களை வாழ்க்கையில் சந்தித்தவர்கள் குழந்தைகளுக்கு தேனை  தொட்டு வைத்தால் மிகவும் நல்லது.

Tuesday, 9 April 2013

மீண்டுமோர் காத்திருப்பு!!!­

காத்திருக்கின்ற­ேன் அந்தப் பொழுதுகளுக்காய்­,
அலுவலகம் விட்டு வீடு வரும் உன்னை,
அள்ளியெடுத்துப்­ பூசிக் கொள்வதற்காய்,
காலை முதல் மாலை வரை காத்திருந்து,
சேர்த்து வைத்த கதைகளெல்லாம்,
காதோரம் சொல்லிவிட்டு உன் கைவிரல்கள் சொடுக்கெடுத்து,
சூடாய் ஒரு தேநீர் சுடு நீரில் ஓர் குளியல்,
வாகாய் உன் மார்பில் பொருந்தி வக்கணையாய்க் கதை பேசி,
வறுத்த மீன் நீ ருசிக்க என் வயிற்றின் பசியடங்க,
குழந்தையாய் நீயுறங்க கண்விழித்தே நான் ரசிக்க,
விடிந்திடும் ஓர் பொழுதில் விருட்டென நீயணைக்க,
வெட்கியே நான் விலக விடாமல் நீ துரத்த,
சிரிப்புடன் விரைந்துமே நொடிகளும் கடந்துவிட,
அலுவலகம் செல்லுமுன்னை வழியனுப்பி விட்டு விட்டு,
கண்ணோரம் நீர் கரிக்க உன் கண் மறைவில் துடைத்துவிட்டு,
நீ திரும்பும் வேளைக்காய் மீண்டுமோர் காத்திருப்பு!