Monday 11 September 2017

குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா !


குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா !

உணவூட்டுதல் ,அரைஞாண் கயிறு கட்டுதல்.
ஒரு குழந்தையை தனித்துவமாக அழைக்கவும், அடையாளம் காண்பிக்கவும் பெயர் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒருவருக்கு வைக்கும் பெயர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. குழந்தைக்கு பெயர் சு ட்டுவதை நாம் ஒரு சடங்காக கொண்டாடுகிறோம். இந்த பெயர் சு ட்டும் விழாவானது தமிழர்களால் எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
ஓர் குழந்தை பிறந்த தினத்திலிருந்து 16ம் நாள் இந்த பெயர் சு ட்டும் விழாவானது கொண்டாடப்படுகிறது. 16ம் நாள் வைக்க முடியாதவர்கள் 10ம் நாள் அல்லது 12ஆம் நாட்களிலும், அல்லது அடுத்து வரும் ஏதேனும் ஒரு சுப தினங்களிலும் பெயர் சு ட்டும் விழாவானது வைக்கப்படுகிறது. குழந்தைக்கு பெயர் சு ட்டுவதற்காக நாள் நட்சத்திரம் அனைத்தும் பார்த்து உறவினர்கள் அனைவரையும் அழைக்கின்றனர்.
பெயர் சு ட்டும் விழா அன்று குழந்தைக்கு புத்தாடை அணிவித்து குழந்தையின் தாயாரும், தகப்பனாரும் மூன்று முறை குழந்தையை மாற்றிக் கொள்வர். அதன்பின் குழந்தையை தந்தையின் மடியில் வைத்து ஒரு தாம்பு லத்தில் புழுங்கலரிசியை நிரப்பி, ஓர் விரலி மஞ்சளை எடுத்து குழந்தைக்கு வைக்கும் பெயரை மூன்று முறை எழுத வேண்டும். சில குழந்தைகளுக்கு தாய் அல்லது தாய் வழியில் இருக்கும் பெரியவர்களின் பெயரை வைக்கின்றனர், அல்லது சில குழந்தைகளுக்கு கடவுள் பெயர்களையும் சு ட்டுகின்றனர்.
பிறகு குழந்தையின் தாய், தந்தையோ அல்லது தாய், தந்தைவழி பெரியவர்களோ குழந்தைக்கு பெயரிடலாம். குழந்தையின் வலது காதில் மூன்று முறை மெல்லிய குரலில் பெயரை உச்சரித்து தொட்டிலில் இடுவர். பின் குழந்தையின் அத்தை முறையில் இருப்பவர்கள் மற்றும் உறவினர்கள் வளையல், கழுத்து சங்கிலி அணிவித்து மகிழ்வர்.
குழந்தைக்கு உணவூட்டுதல் :
முதல் முறையாக குழந்தைக்கு உணவு ட்டுவதை தமிழர்களால் விழாவாக கொண்டாடப்படுகிறது. குழந்தைக்கு முதலில் உணவு ஊட்டும் போது சர்க்கரை பொங்கல், பாயாசம் போன்ற ஏதேனும் ஓர் இனிப்பு சுவை கொண்ட உணவுகளை செய்து குழந்தையின் அத்தை அல்லது தாய் தந்தை வழி சொந்தங்களில் யாரேனும் ஒருவரால் இந்த சடங்கானது செய்யப்படுகிறது. இந்த சடங்கானது வீடு அல்லது கோவில்களிலும் செய்யப்படுகிறது.
அரைஞாண் கயிறு அணிவித்தல் :
குழந்தைக்கு ஐந்தாவது மாதத்தில் வெள்ளி அரைஞாண் கயிற்றை கட்டலாம். அரைஞாண் கயிற்றுடன் கருகமணி, செப்புக்காசு சேர்த்து கட்டினால், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. சுப திதிகள், சுப லக்னத்தில் அரைஞாண் கயிறு அணிவித்தால், குழந்தை ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்கும்.

♥தமிழர்களின் சடங்குகளும் திருவிழாக்களும் !






தமிழர்களின் சடங்குகளும் திருவிழாக்களும் !

ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நிலைகளை தாண்டி வருகின்றனர். அவரவர்களின் சமயம் மற்றும் சந்தர்ப்பங்களுக்கு தகுந்தாற்போல் பல்வேறான சடங்குகளை தமிழர்கள் கடைபிடித்து வருகின்றனர். சடங்குகள் பொதுவாக அனைத்து உறவினர்களையும் அழைத்து நடத்தி வருகிறோம். சில சடங்குகள் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது.

மனிதர்களின் வாழ்வோடு சம்பந்தமான குழந்தை பிறப்பு, பெயர் வைத்தல், காது குத்துதல், திருமணம் போன்றவை நடத்துகிறோம். மனிதர்களின் தேவைகளின் அடிப்படையில் வாகனம் வாங்குதல், வீடு கட்டுதல், தொழில் தொடங்குதல் போன்றவற்றிற்கும் பல சடங்குகளை நாம் செய்து வருகிறோம். இந்த சடங்குகளை மேற்கொள்வது நம் உறவினர்களோடு மகிழ்ச்சியாக இருக்கும் விதமாகவும் அமைகிறது. தமிழர்கள் செய்யும் சடங்குகள் மற்றும் விளக்கங்களை பார்ப்போம்.



தேனை  தொட்டு வைத்தல் !

குழந்தை பிறந்தவுடன் தேனை  தொட்டு வைத்தல் தமிழர்களின் சடங்குகளில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தேனை  தொட்டு வைத்தல் என்பது பிறந்த குழந்தையின் நாவில் இனிப்பு சுவையுடைய நீர்மத்தை வைக்கும் ஓர் சடங்காகும். தேனை  வைக்க தேன் அல்லது இனிப்பு சுவை கொண்ட தண்ணீரை வைக்கின்றோம்.

தேனை  தொட்டு வைக்க காரணம் என்ன?

தேனை  என்ற சொல்லிற்கு புத்தி என்பது அர்த்தம். தேனை  தொட்டு வைக்கும் பெரியவர்களின் நற்குணத்தினை அக்குழந்தையும் பெற்று சமூகத்தில் உயர்ந்து நிற்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த சடங்கினை நாம் செய்கிறோம்.

யார் இந்த சடங்கினை செய்யலாம்?

இந்த சடங்கினை அந்த குழந்தையின் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். சில சமயங்களில் அவர்களின் வாழ்க்கை முறையை வைத்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. குழந்தைகளின் தாய்மாமாவிற்கே இதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதன்பின் அதிகப்படியான இன்பங்களை வாழ்க்கையில் சந்தித்தவர்கள் குழந்தைகளுக்கு தேனை  தொட்டு வைத்தால் மிகவும் நல்லது.