Tuesday 15 May 2012

குழந்தை தொழிலாளி



வேறூன்றி தானாக நிற்கவும் இல்லை செந்தளிறுகள் ,அதற்குள் ஆயினரே பெரும் பொதி சுமக்கும் களிறுகள்.


...வாய்பாடு பாடி கல்வி பயிலும் வயதில்,கூப்பாடு போடும் வியாபாரி ஆயினர் நெடுஞ்சாலையில் .


கருவறையின் கடும்வேப்பதில் உருவெடுத்து, பின் மண்ணில் புலம்பெயர்ந்த பின்னும் , வெடித்து கருகளைகின்றனர் பட்டாசு தொழிற்சாலையில்.


பத்து திங்கள் தூமைதனை தடை இட்டு , பிறந்த நன்குழந்தை விசைக்க படுகிறதே குப்பையில், இதற்க்கா வளர்த்தால் அன்னை தன் அகப்பையில் .


ஈரம் என்பது துளியும் இல்லை கல்லால் செய்த இவர்களின் அஹத்தில்,சிதைகின்றனரே பிஞ்சு கைகளை கடும் கந்தகத்தில்.


உடன் துளைந்த துளி உயிர்கள் உறைய உள்புகுந்து வந்தடைந்தனர் வையகம் , இருந்தும் வழி இல்லை வாழ கேட்கின்றனர் யாசகம் .


மண்ணை நுகர்ந்த சாமர பூக்களும் கையாள படுவதில்லை பூக்களாய் ,வறுமையில் வாடும் குழந்தையும் கையாள படுவதில்லை குழந்தையாய் .


"நாளைய தலைமுறை சீராய் வாழ வழி நெடுவோம் ,ஆழியில் வளரும் குழந்தை தொழிலை விளிம்பிலேயே அளித்து விடுவோம் ".


குழந்தை தொழிலாளி எனும் சொல் இனி இல்லை அகராதியில்.!!??

1 comment: