Saturday 5 May 2012

நம்பிக்கை

நம்பிக்கை:
வாழ்க்கையில் முன்னேற நாம் நம்மைச் சார்ந்திருப்போரை நம்பவேண்டியது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு நம்மைச் சூழ்ந்திருப்போரின் நம்பிக்கையைப் பெறுவதும் அவசியமாகும்.
தன்னம்பிக்கை:
வாழ்க்கையில் முன்னேற பலவிதமான நம்பிக்கைகள் இருந்தாலும் சிகரம் வைத்தது போன்றதுதான் தன்னம்பிக்கை. நாம் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்ற ஐயப்பாடு மட்டும் கூடாது. விளைவு எதுவாகினும் முயற்சி செய்யும் மனதிடமும், திட்டமும் மிக அவசியம். அத்துடன் முயற்சியின் விளைவு (முடிவு) வெற்றிகரமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட வேண்டும்.
தோல்வியை சந்திக்கவும் நாம் தயார் நிலையில் இருக்கவேண்டும். தயார் என்பதே ஒரு முயற்சிதானே...!
நமது முயற்சியில் நாம் நிச்சயம் வெற்றிபெற முடியும் என்ற தன்னம்பிக்கை பலமே நமக்கு வலிய வெற்றியைத் தேடித் தந்துவிட முடியும்.
எனக்கு என்ன சக்தி இருக்கிறது..?, இந்த முயற்சியில் நாம் வெற்றியடைவோமா..? என்பதே கூடாது.....!!
வெற்றியை ஈட்ட முடியும் என்ற மன உறுதி ஏற்படுவதுதான் தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்....!!
உற்சாகமின்மை:
நம்மைப் பற்றி, நம் திறமையைப் பற்றி, சக்தியைப் பற்றி நமக்கே நம்பிக்கை இல்லையென்றால் நமது முயற்சியின் போது நமக்கு எவ்விதம் உற்சாகம் உண்டாகும்..?
நம்மீது நமக்கே நம்பிக்கை இல்லையென்றால் தளர்ச்சியும், (எண்ணச் சலிப்பும்) வெறுப்பும்தானே நமது முயற்சியின் போதும் பிரதிபலிக்கும்....!
இவ்விதம் தளர்ச்சியுடன் கூடிய முயற்சி தோல்வியையன்றி வெற்றியை எவ்விதம் ஈட்டும்.?
தன்னம்பிக்கை இல்லாதவர்கள் வாழ்க்கையில் முன்னேற எண்ணுவது இரண்டு காலையும் இழந்துவிட்ட நொண்டி ஓட்டப் பந்தயத்தில் போட்டி போட வந்த கதைதான்.
தன்னம்பிக்கை என்பது மனிதனுக்கு இயல்பாக அமைவதுதான். அவன் தன் நிலையற்ற புத்தி காரணமாக அதனை நிலைகுலைத்துக் கொள்கின்றான். தன்னம்பிக்கையை இழந்தவன் கடுமையான முயற்சியால் திரும்ப பெறமுடியும். ஆனால் அதனை நிலைப்படுத்திக் கொள்ள தனிப் பயிற்சியும், பழக்கமும், பொறுமையும் வேண்டும்.

இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் தன்னம்பிக்கை செறிந்த வார்த்தைகள்தானே இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் தாக்குதலைத் தகர்த்தெறிந்து தரைமட்டமாக்கியது !
உலகத்தை வென்ற அத்தனை சாதனையாளர்களும் உரக்கச்சத்தமிட்டு உயர்த்திப்பிடித்த கொடி தன்னம்பிக்கைக்கொடிதானே... ! .... வரலாற்றின் உயிர்ப்பக்கங்களை எல்லாம் புரட்டிப்போட்ட சாகசங்கள் தன்னம்பிக்கையால் விளைந்தனவே !தன்னம்பிக்கையோடு உழைத்தால் எந்த நிலையையும் எவராலும் எட்டிப்பிடிக்க இயலும் .

முயற்சி - வெற்றியின் - சாத்தியம்
-------------------------------------------------------------------------
ஒரு ஆல விருட்சம்..............!
ஒற்றை முடி கொண்டு அசைக்கும் முயற்சி...........?

முயற்சி தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.............!
தன்னம்பிக்கை நம்பிக்கையின் வேராயிருக்கிறது.........!
நம்பிக்கையானது............நம்
முயற்சி என்ற
பயிற்சியைக் கூட்டுகிறது.........!
முயற்சி - வெற்றிக்கு - சாத்தியம்...........!
இல்லை என்று தெரிந்தும்
முடியாது என்பதைக் கூற முயலாத
முயற்சியானது வினையெடுக்கிறது...........!
வினை நல்வினையென்று
வினையாலமைந்த முயற்சி - திருவினையாகிறது....!!

ஒவ்வொரு முயற்சியின் போதும்...............
ஒரு வெற்றியாளனாய்....................நீ...........!
இதற்கு முன்பதான உன் முயற்சியில்.......
இன்னும் உயிருடன்தான்................நீ...........!

இன்னுமொருமுறை நீ முயற்சி..................!

முடிவிலா முயற்சியுடன்
முயன்றே......நீ.......முன்னேற..........
முயற்சி - வெற்றியின் - சாத்தியம்......!!!!!!!!

No comments:

Post a Comment