Monday 27 July 2020

*சுந்தர காண்டம்!* *பகுதி : 2*

*சுந்தர காண்டம்!*

 *பகுதி : 2*

*வாயு பகவான் எங்கு இருக்கிறாரோ பகவான் அங்கு இருக்கிறார். வாயு பகவானுடைய அனுக்ரஹம் சுக்ரீவனுக்குக் கிடைத்தது. ஹனுமனை நம்பிட ஜெயமே. ஹனுமனை நம்பியதால் சுக்ரீவனுக்கு ஜெயமே. என்னால் முடியும் என அனுமன் ஒருபோதும் சொன்னதில்லை. ஹரியே கர்த்தா என்பதில் எப்போதும் த்ருடமாக இருப்பவர். சுக்ரீவனைக் கொண்டு போய் இராமனிடம் ஒப்படைத்து விட்டு "இவன் உன்னிடம் சரணாகதி அடைந்து விட்டான். நீயே காப்பாற்ற வேண்டும். வாலியிடம் இருந்து நீயே காப்பாற்ற வேண்டும். ராஜ்ஜியத்தை பெற்றுத் தர வேண்டும்" என வேண்ட, இராமன் அனுக்ரஹம் செய்தார். "சீதாவைத் தேடிக்கொடு. வாலியை வதம் செய்து உனக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கிறேன்" என ராமர் அருள் புரிகிறார்!*

*ஹனுமந்தன். ஜாம்பவான் தலைமையில் நான்கு திக்குகளிலும் சீதையைத் தேடி கிளம்பினார்கள். தக்ஷிண திக்கில் தேடிக் கொண்டே மகேந்திர கிரி மலை வரை போகிறார்கள். என்ன செய்வது? கண்டுபிடிக்க முடியவில்லையே என்று. விசாரம் வருத்தம். ஒரு வருடம் கெடு. ஒரு மாதம் முடிந்து விட்டது. இரண்டு நாட்கள் தான் பாக்கி.. நல்ல குகை கிடைத்தது. மயனால் உருவாக்கப்பட்ட குகை. நம்பிக்கை இல்லை. திரும்பிப் போனால் சுக்ரீவன் கொன்று விடுவார். முன்னால் சென்றால் சமுத்திரம். குகையிலிருந்து காலம் கழித்து விடலாம். நல்ல காற்று ..நல்ல உணவு.. அனைவரும் ஒப்புக் கொண்டு உடன்படுகிறார்கள்*

*அப்போது ஹனுமான் "இராம காரியத்தை செய்ய வந்திருக்கிறோம்.பின்வாங்கக் கூடாது. உண்ணாவிரதம் இருக்க வேண்டும். ராமஜபம். இராம கதை சங்கீர்த்தனம் செய்து கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்கள். தீர்வு கிடைக்கும். இல்லை எனில் இந்த நாமம் சொல்லிக் கொண்டே உயிரைத் துறந்திடுவோம். நம்பிக்கை கொடுத்தார். என் பேச்சை நம்புங்கள்" எனக் கடமையை உணர்த்தினார்!*

*சம்பாதி பக்ஷி ஜடாயுவின் சகோதரன். சிறகொடிந்து கீழே கிடந்தது. சூரியனின் தேரோட்டி அருணனின் புத்திரன். ஜடாயு தசரதனுக்கு நண்பன். சீதையை இராவணன் கவர்ந்து சென்ற போது ஜடாயு சண்டை போடுகிறான். இராவணனை எதிர்த்து பிரயத்தனங்கள் செய்து, அடிபட்டு இறக்கும் தருவாயில் இராம தரிசனம் கிடைத்தது. தசரதனுக்கு அந்திம காரியங்கள் செய்ய முடியாத இராமன் ஐடாயுவுக்கு பண்றார். விஷ்ணு தர்மத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டும். நல்ல விஷயங்களில் ஆசைப்படுவதாலேயே பலன் கண்டிப்பாக கிடைக்கும்... பகவானின் கீதையின் வாக்கை விளக்கும் மத்வரின் வாக்கு !*

*ஜடாயுவின் தம்பி சம்பாதி பக்ஷி. சூரிய வெப்பம் தாங்காமல் இறகுகள் பிய்ந்தன. வானரங்கள் எல்லாம் இராம ஜெபம் செய்யச் செய்ய, அதனைக் கேட்ட மாத்திரத்தில் அத்தனை வருடங்களாக முளைக்காத சிறகுகள் முளைத்தன. நாம ஸ்மரணை நாம சங்கீர்த்தனம், ஸ்ரவணம், அதுவே ஆனந்தம் துக்க பரிகாரம். மேலே பறந்து கழுகுப் பார்வையால் மகேந்திர மலையில் இருந்து பார்க்கிறது. இலங்கையில் சீதாதேவி அசோகவனத்தில் ஸிம்ஸூபா மரத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிருக்கக் கண்டது. அங்கே போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்றது!.*

*யார் போவது? கலந்துரையாடல் நடந்தது.100  யோஜனை தூரம். ஜாம்பவான் மற்றும் அங்கதன் அவரவர்கள் தங்களால் முடியும் தூரத்தைக் கூற அனுமந்தன் பேசாமல் இருந்தார். ஒவ்வொருவரும் ஒரு யோசனை தாங்கி திரும்பும் நிலையில் இல்லை.*

*நானே செய்கிறேன் என்று கிளம்பி சென்றார் அனுமன். ராமபிரானின் அனுக்கிரகத்தினால் சாத்தியம். இந்த ரூபத்தில் போக முடியுமா? வளர்ந்து வளர்ந்து மகேந்திர மலையினை விட உயரமாக வளர்கிறார். விசுவரூபம். இராம ஜபத்தை சொல்லி கொண்டே பறக்கிறார். மகேந்திர மலையினை எம்பி அழுத்த கிரியின் பூமி கீழே போனதாம். சேஷ பகவான் ஆயிரம் தலைகளில் அவரின் முன் ஒரு தலையில் கடுகு போல் காணப்படும் பிரமாண்டத்தைத்  தாங்கிக் கொண்டு இருக்கிறார். சேஷ பகவானை கூர்மரூபி வாயு பகவானும், கூர்ம ரூபத்தில் உள்ள வாயு பகவானை கூர்ம ரூபத்தில் உள்ள ஸ்ரீ ஹரியும் தாங்கிக் கொண்டு இருக்கிறார் !*

*பறக்கிறார் மரங்கள் பக்ஷிகள் செடிகள் கொடிகள் எல்லாம்* *பின்னால் பறக்கிறது.*

*விக்னகங்கள் பல வந்தன.*
*பறந்து போகும் போது சமுத்திர ராஜன் தம் இருப்பிடத்திலுள்ள மைனாக பர்வதத்திடம் "அனுமந்தன் வருகிறார். நன்றிக் கடனை காட்ட வேண்டும்" என உணர்த்துகிறார்.* *மைனாகன் சிவனின் மைத்துனர். நம்மாலான சேவை செய்திட வேண்டும். முன்னொரு காலத்தில் பர்வதங்கள் எல்லாம் இரக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தன.  ரிஷிகளுக்கு இது தொந்தரவாக இருக்க,  இந்திரனிடம் புகார் செய்ய, வஜ்ராயுதத்தால் இறக்கைகளை வெட்டி விடுகிறார். எல்லா மலைகளையும் உட்கார வைத்து விடுகிறார்கள். மைனாத பர்வதம் வாயு பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டது. இந்த சமுத்திரத்தில் போய் இருந்து கொள். இந்திரன் வர மாட்டான் என அருள்புரிய, மைனாக பர்வதம் ரக்ஷிக்கப்பட்டது. இப்போது, வாயு பகவானே அவதாரமெடுத்து ஹனுமனாக இங்கே வர, இதற்கு பிரதி உபகாரமாக எழுந்து மேலே வந்தது, சிறிது இளைப்பாற வேண்டியது.*

*பல விதமான விக்னங்கள். 1. அன்புத் தொல்லையால் விக்கினங்கள்*
*2. தேவதைகள் பரீட்சை ரூபமான விக்கினங்கள். 3. கலிபுருஷன் முதலான தைத்தியர்களால் வரும் விக்னங்கள்!*

*மைனாக பர்வதம் எதிரே நின்றது. ருசியான பழங்கள் மூலிகைகள் தீர்த்தம் எடுத்து கொண்டு ஓய்வெடுக்க சொன்னது. எவ்வகையிலும் ராமனின் சேவையில் ஓய்வு கூடாது. எனக்குத் தேவையுமில்லை என மறுக்கிறார் ஹனுமான்.  ஏனென்றால் ஓய்வு எடுக்காமல் சேவை செய்யும் ஒருவர் முக்ய பிராணர். எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இடைவிடாது தினமும் 21600 முறை ஹம்ஸ ஸ்வாஸ ஜெபம் செய்பவர். வாயு பகவான் ஓய்வு எடுக்கமாட்டார். பிற தேவதைகள் கூட நம் தேகத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் ஓய்வெடுப்பர். முக்ய பிராணன் தூங்கும் போதும் ஓய்வு எடுப்பது இல்லை. வாயு பகவான் நம் தேகத்தில் இருந்து சுவாச ஜபம் செய்வதனால் பகவான் இருக்கிறார்!.*

*அனுமன் ஓய்வும் வேண்டாம். ஆயாசமும் இல்லை. ஆலிங்கனம் செய்து கொண்டார். மைனாகத்திற்கு அனுக்கிரகம் புரிந்தார் இந்திரன் பார்த்து இருப்பார். வாயு பகவான் ஸ்பர்ஷம் ஆனபிறகு எவரும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது என.... விடைபெற்றார் ஜீவோத்தமனான வாயு பகவான்...*

*காளிங்கன் யமுனை ஆற்றில் விஷம் கக்கினான். கருடனுக்கு பயந்து வந்தான். நர்த்தனமாடிய கிருஷ்ணன் நீ கிளம்பு என்கிறார். கருடன் உனை ஒன்றும் செய்ய முடியாது. என் பாத முத்திரைகள் தலையில் பதிந்து விட்டது. எமதூதனும் போய் விடுவான் என அருள் புரிந்தான் சர்வோத்தமனான ஸ்ரீ ஹரி...!*

*பறந்து போகும் போது ஸுரஸா எனும் நாகமாதா ஒரு பரீட்சை வைக்கிறார். வாயைத் திறந்தாலே அனைவரும் அதில் விழ வேண்டும். தேவதைகள் அனுப்பி வைத்த தேவதை என்று அனுமனுக்குத் தெரியும். விக்னம் தாண்ட வேண்டும். பெரிய ரூபமாகிறார். அவள் வாயைத் திறக்கிறாள். இன்னும் பெரிய ரூபம். வாயைத் திறக்கிறாள்!*

*பதிவுகள் தொடரும்*
🙏

No comments:

Post a Comment