Monday 27 July 2020

ஸ்ரீ வித்யா பூர்ண தீர்த்தர்

*ஸ்ரீ வித்யா பூர்ண தீர்த்தர்!*

*வியாசராஜ மட பீடாதீஸ்வராய் இருந்தவர்!*
  
*இவர் காலம் 1824 to 1872 / 48 வருடம் பீடாதிபதியாக இருந்த மகனீயர்!*

*மூல பிருந்தாவனம் : ஸோஸலே!*

*ஆஸ்ரம குரு ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர்!*

*ஆஸ்ரம சிஷ்யர் ஸ்ரீ வித்யா சிந்து தீர்த்தர்!*

*மூல கோபாலகிருஷ்ணன் மற்றும் தன் குருவின் பரிபூரண அனுக்ரஹம் பெற்றவர்.  ஞானம், தபோசக்தி, ராஜாக்களிடம் நல்லுறவுக்கு பாத்திரமாகி இருந்தவர்!*

*தென்னிந்திய சஞ்சாரங்கள் போது, அதற்குத் தேவையான. அனைத்து வசதிகளையும் ராஜாக்கள் அவருக்கு செய்து தந்தார்கள். 1859ல் சஞ்சாரம் செய்த போது, அவருடைய பரிவாரம் எப்படி இருந்தது என்பதை அரசாங்கம் சாசனம் செய்துள்ளது. ரத கஜ மற்றும் பல படைகள்,  பரிவாரங்கள், வீரர்கள் கொண்டு கொற்றக் குடையின் கீழ் அவரது சஞ்சாரம் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. அனைத்து பொருளுதவிகளும் ராஜா மும்முடி கிருஷ்ணராஜ உடையர் மடத்தின் மேல் கொண்டுள்ள பக்தியால் சமர்ப்பித்தார். அவர் சேர்த்த நிறைய ஸம்பத்துக்கள் பிற்காலத்தில் ஒரு பெரிய  சத்விஷயத்திற்க்கு உபயோகப்பட்டது!*

*இவருடைய குரு ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர் பட்டத்தில் இருந்தது 48 நாட்களே. ஆனால் தன் சிஷ்யர் ஸ்ரீ வித்யா பூர்ண தீர்த்தருக்கு 48 வருடம் இருக்கும் படியான பாக்கியத்தையும் ஆசி அனுக்கிரஹத்தையும் தந்தார்!*

*இவருடைய சிஷ்யர் ஸ்ரீ வித்யா சிந்து தீர்த்தர் காலத்தில் மிக மோசமான பஞ்சம் நிலவியது. அரசாங்க கஜானா கூட காலியாகி விட்ட நிலையில் அப்போது இவர் மட சிஷ்யர்களை அனுப்பி கேரளா போன்ற மற்ற பிராந்தியங்களுக்கு அனுப்பி தன்னிடமிருந்த 1000 கிலோ தங்கத்தை தானியமாற்று செய்து அதனை ஜாதிமத பேதங்கள் பார்க்காமல் மைசூர் சுற்று வட்டார பிராந்தியத்தவர்கள் அனைவரின் பசிகளை போக்கி அன்னதானம் செய்தார். அதற்கு அவரை அக்கி பேளே ஸ்வாமிகள் என்றே அழைத்தனர். இந்த மாதிரி ஒரு காலகட்டம் வருவதையும், அதற்கு வியாசராஜமடம் உதவும் என்பதையும், இவரில் இருந்து நான்கு பேருக்கு முன்னால் பட்டத்தில்  இருந்த ஸ்ரீ வித்யா வல்லப தீர்த்தர் என்ற  பீடாதீஸ்வர் சொல்லிவிட்டுப் போயிருந்தார்!*

*இவருடைய இன்னொரு சிஷ்யர் சுப்பராய தாஸரு அவருக்கு கோபால உடையரு என்ற நாமகரணம் செய்து ஸன்யாஸ ஆஸ்ரமத்தைக் கொடுத்தார். அவர் பிடி சன்னியாசியாக இருந்தவர். இவர் பூர்வாஸ்ரமத்தில் ராஜா மும்முடி கிருஷ்ணராஜாவுடன் சொக்கட்டான் விளையாடும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர். தீடிரென பகவானின் சூசனையின் பேரில் விரக்தி வைராக்கியம் ஏற்பட்டு சன்யாசம் ஏற்றுக் கொண்டவர்!*

*வியாச ராஜர் காலத்தில் இருந்த செழிப்பை 18 ஆம் நூற்றாண்டில் கண்முன் கொண்டு நிறுத்தியவர் ஸ்ரீ வித்யா பூர்ண தீர்த்தர்!*

*1872 ல் ஸ்ராவண மாதம் சுக்லபட்ச சஷ்டியில் ஸோஸலேயில் பிருந்தாவனஸ்தர் ஆகிறார்!*

*அவருடைய நாம ஸ்மரணை செய்தால் ஞானம் பக்தி வைராக்கியம் மற்றும் அவர் மாதிரி தான தர்ம சிந்தனைகளும் மார்க்கங்களும்  கிடைக்கும்!*

*ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து!*


🙏🙏🙏

No comments:

Post a Comment