Sunday 26 July 2020

சுந்தர காண்டம்

*சுந்தர காண்டம்:*

*பகுதி : 01*

*பகவானின் அவதாரங்களில் விசேஷமான அவதாரம் ராம அவதாரம்!*

*முன் மாதிரி உதாரணமாக இருந்தவர் ராமர். தான் செய்வதைப் பார்த்து ஜனங்கள் பல சத்விஷயங்களை செய்ய வேண்டும் என்பதற்காக எடுத்த அவதாரமிது. ஒரு ஜீவன் பிறந்தது முதல் கடைசி வரை எப்படி வாழ வேண்டும் என்று கற்பித்துக் கொடுத்த அவதாரமிது.!*

*மாதா பிதா பக்தி, சகோதரர் பாசம், எளிமை, சிநேக பாவம், குரு பக்தி, ஏக பத்தினி விரதம், அடைக்கலம் அடைந்தவர்களைக் காப்பாற்றுதல் ஆகியனவைகளை கற்றுக் கொடுத்த அவதாரம்!*

*மூல ராமாயணத்திலிருந்து வந்தது வால்மீகி ராமாயணம். மூல ராமாயணம் என்பது 100 கோடி சுலோகங்களை உடையது. அது ஹயக்ரீவ ரூபி பரமாத்மாவினால் வாயு பகவானுக்கு உபதேசம் செய்யப்பட்டது. பின்னர் வால்மீகி முனிவர் பகவானின் அனுக்கிரகத்தால் எழுதிய ராமாயணத்தில் 7 காண்டங்களாகப் பிரித்து கொடுத்துள்ளார்!*

*1. பால காண்டம்*
*2. அயோத்தியா காண்டம்*
*3. ஆரண்ய காண்டம்*
*4. கிஷ்கிந்தா காண்டம்*
*5. சுந்தர காண்டம்*
*6. யுத்த காண்டம்*
*7. உத்தர காண்டம்*

*ஒரு ஜீவனுக்கு முக்கியமானது ஹ்ருதயம். அதுபோலவே இராமாயணத்தில் முக்கியமான காண்டம் சுந்தர காண்டம். முழுக்க முழுக்க அனுமந்தனைப் பற்றியது. இராமாயணம் என்பது இராமனுடைய நாடகம். இராமாயணத்தில் சுந்தர காண்டம் என்பது ஒரு திருப்புமுனை!*

*சுந்தர காண்டத்தில் வருகின்ற ராமன், சீதை, அனுமன், வனம், கதாபாத்திரங்கள் எல்லாமே அழகு என வர்ணிக்கப்படுகிறது!*

*சுந்தர காண்டம் எப்படி இராமாயணத்தில் ஒரு திருப்புமுனையாக உள்ளதோ, சுந்தர காண்டத்தை ஸ்ரவணம் கீர்த்தனம் பாராயணம் செய்தாலே,  வாழ்வில் திருப்புமுனை ஏற்படும்.!*

*ஸ்ரீ ராகவேந்திரரின் ப்ராத சங்கல்ப கத்யத்தில் வாயு பகவானுக்கு 32 லட்சணம் உள்ளது என்று சொல்கிறார். அந்தளவுக்கு சுந்தரமான அனுமனைப் பற்றியே முழுவதும் உள்ளதால் இதற்கு சுந்தர காண்டம் என்னும் பெயர் வந்திருக்கலாம்.!*

*அனுமார் ராமர் மேல் காட்டிய பக்தி, அனுமாரின் பிராபாவம், விவேகம், வேகம், பவ்யம்,  வாக்கு வன்மை அனைத்தும் சுந்தர காண்டத்தில் காணலாம்!*

*புத்திர் பலம் யசோ தைர்யம்*
*நிர்பயத்வம் அரோ கதா!*
*அஜாட்யம் வாக்படுத் வம்ச*
*ஹனூமத் ஸ்மரணாத் பவேத்!*

*என்ற ஸ்மரணயே மிகவும் விசேஷமாகி அனைத்தும் தரவல்லது.!*

*ராமச்சந்திர மூர்த்தி அகஸ்தியரிடம் சொல்கிறார், என் முதல் சந்திப்பில் தான் அனுமந்தனுடன் பேசும் போது ஒரு அக்ஷரத்தில் கூட தவறிருக்காது. எல்லாம் புரிந்து கொள்ளும் வகையில் ஏற்புடையதான நுணுக்கம் இருக்கும். இவ்விதமாக  ராமனாலேயே ஏற்பட்ட பாராட்டுகளை பெற்றவர் அனுமன். அவரின் மறு அவதாரமான மத்வாச்சாரியரும் 37 கிரந்தங்கள் எழுதியுள்ளார். விசேஷமான வாக்வண்மை இருந்தது.!*

*சுந்தரருடைய சுந்தர காண்டம். வாயுபகவான் எப்படி அனுமந்தராகவும், பின்னர் மத்வாச்சாரியாராகவும் அவதாரம் செய்தார். இரண்டாவதாக மத்வர் பத்ரிகாஸ்ரமம் போன போது, வேதவியாசரிடம் மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தை செய்ய ஒப்புதல் வாங்கி வந்தார்!*

*நமக்கு ஏற்படும் குழப்பமான கட்டத்தில், 32 அத்தியாயம் கொண்ட இம் மகாபாரத தாத்பர்ய நிர்ணயம்  நிவாரணமாகிறது. இதில் 4 முதல் 9 வரையுள்ள அத்தியாயங்களில் ராமாயணத்தின் சாரத்தை, அதுவும் நமக்கு ஏற்படும் சாஸ்திர ரீதியான குழப்பங்களை சரிசெய்யும் வகையில் நிர்ணயம் செய்து உள்ளார். அதில் 7 வது அத்தியாயம் சுந்தர காண்டமாகும். !*

*எந்தவொரு அனுமன் இலங்கைக்கு போய் துவம்சம்  செய்து சீதையிடம் மோதிரத்தை ஒப்படைத்து, சீதையின் சூடாமணியை வாங்கி வந்து ராமனிடம் கொடுத்தாரோ, அவரே மத்வராகி மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தை எழுதியது உண்மையானது சத்தியமானது!*

*பதிவுகள் தொடரும்!*

No comments:

Post a Comment