Monday 27 July 2020

*ஸ்ரீ ஸத்யவர தீர்த்தர்!*

*ஸ்ரீ ஸத்யவர தீர்த்தர்!*

*ஆராதனை நாள் :*

*27th July 2020 / திங்கட்கிழமை!*

*உத்தாரதி மட பீடாதீஸராய்  இருந்தவர்!*

*அவருடைய காலம் 1794  -- 1797*

*இவருடைய குரு ஸ்ரீ ஸத்யஸந்த தீர்த்தர்.!*

*இவருடைய சிஷ்யர் ஸ்ரீ ஸத்யதர்ம தீர்த்தர்!*

*மூல பிருந்தாவனம்: ஸந்தேபெனூர்/ ஆந்திரா!*

*இவருடைய சிஷ்யர் ஸ்ரீ ஸத்யதர்ம தீர்த்தர் தன் கிரந்தங்களில், இப்படி தான் ரஸனை செய்வதற்கு தன் குருவின் அனுக்ரஹம் தான் என்று ஸ்ரீ ஸத்யவர தீர்த்தரை ஆராதிக்கிறார்!*

*பீடாதிஸ்வராய் இருந்த மூன்று வருடங்களிலேயே, தன் ஞானத்தையும், மகிமைகளையும் காண்பித்தவர்!*

*இவருடைய பரமகுரு ஸ்ரீ ஸத்யபோத தீர்த்தர். இவரிடம் படித்த மூன்று பேர்கள்:*

*1. ஸ்ரீ ஸத்யஸந்த தீர்த்தர் / குரு*
*2. ஸ்ரீ ஸத்யதர்ம தீர்த்தர் / சிஷ்யர்*
*3. ஸ்ரீ ஸத்யவர தீர்த்தர்*

*மூவருமே ஒருவரிடமே பாடம் படித்து அடுத்தடுத்து உத்ராதி மட பீடாதீஸர்களாக இருந்தவர்கள்!*

*இவருடைய பூர்வாஸ்ரம பெயர் கிருஷ்ணாச்சாரியார். இவருடைய பூர்வாஸ்ரம தந்தை சுப்பண்ணாச்சாரியரிடமே பாடங்களைப் படிக்கிறார். பின்னர் வேதாந்த ஞான சாஸ்திரங்களை தன் குருவிடம் படிக்கிறார். மீமாம்சங்களை திருப்பதியில் பாலாச்சாரியார் என்ற பண்டிதரிடம் படிக்கிறார்.!*

*பலதரப்பட்ட சிஷ்யர்களுக்கு பாடம் எடுக்கிறார். அதில் முக்கியமானவர் விஷ்ணு தீர்த்தர் என்ற பிடி சன்னியாசி. பாகவதத்திற்கு ஸாரோத்தாரம் என்ற கிரந்தத்தைக் கொடுத்தவர். அவருக்கு ஸன்யாஸ்ரமம் கொடுத்து அனுக்ரஹம் செய்தவர் ஸ்ரீ ஸத்யவர தீர்த்தர்.!*

*யாத்திரை மார்க்கத்தில் உடுப்பி போய், பிறகு மகிஷிக்கு பூர்வாஸ்ரமத்தின் போது வரும் போது, ஸ்ரீ ஸத்யஸந்த தீர்த்தரை பார்க்கிறார். இவருக்கு ஏற்கனவே ஆயுள்பாவம் குறைவான காரணத்தால், இவருடைய குரு ஸ்ரீ ஸத்ய போததீர்த்தர் ஆயுளை தானமாக அளிக்கிறார். அப்போது கிருஷ்ணாச்சாரை அழைத்து ஸன்யாஸ ஆஸ்ரமத்தைக் கொடுத்து ஸ்ரீ ஸத்யவர தீர்த்தர் என்று நாமகரணம் செய்து பீடத்தையும் அளிக்கிறார்!*

*சில காலத்திலேயே அவர் குரு ஸ்ரீ ஸத்யஸந்த தீர்த்தர் பிருந்தாவனஸ்தர் ஆக, அந்த க்ஷேத்திரத்திலேயே ஆறு மாத காலம் தங்கி பிருந்தாவனக் கட்டமைப்பு பணிகள் எல்லாம் செய்கிறார். பின்னர் முக்யபிராணரை‌ பிரதிஷ்டை செய்தார்.!*

*பின்னர் சாவானூருக்கு யாத்திரை மார்க்கத்தில் வருகிறார். தன் பரமகுருவான ஸ்ரீ ஸத்யபோத தீர்த்தர் பிருந்தாவனத்திற்கு வருகிறார். அங்கே தன் குரு ரசனை செய்த விஷ்ணு ஸகஸ்ரநாம விவ்ருத்தி என்ற கிரந்தத்திற்கு விசேஷமான பாட பிரவச்சனங்களை தருகிறார் ஸத்யவர தீர்த்தர். பின்னர் ஒரு இலட்சம் ப்ராண மந்திரத்தை ஆவ்ருத்தி செய்கிறார். ஒரு இலட்சம் துளசி அர்ச்சனை ஸ்ரீ ராமருக்கும் வேதவியாசருக்கும் சமர்ப்பணம் செய்கிறார். அந்த இரண்டின் அடையாளமாக ஒரு இலட்சம் பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்து அன்ன ஸந்தர்ப்பணம் செய்து சாதனை செய்தவர்.!*

*பின்னர் திருப்பதி யாத்திரை மார்க்கத்தில், தன் கையாலேயே நான்கு ஸ்ரீ ஸ்ரீனிவாஸ பெருமாள் விக்ரகங்கள் செய்து நான்கு சிஷ்யர்களுக்கு தருகிறார். பின்னர் ஸ்ரீரங்கபட்டினம் வருகிறார். அங்கே வித்யாதீஷ தீர்த்தர் பிரதிஷ்டை செய்த  ராம அனுமனுக்கு பூஜை செய்கிறார். அப்போது கொள்ளையர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. சூசனையின் படி தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு பெனுகொண்டா க்ஷேத்திரத்திற்கு வருகிறார். அங்கே வேதவியாச தீர்த்தருக்கு பூஜை செய்கிறார். அங்கிருந்து வட இந்தியா நோக்கிப் போகலாம் என்று எண்ணும் போது கொள்ளையர்கள் தொந்தரவால் அங்கேயே தங்கி விடுகிறார்!*

*அவர் அனுஷ்டானத்திற்கு போயிருந்த சமயம், கொள்ளையர்கள் வேவு பார்த்து பூஜா பெட்டியை எடுத்துச் சென்று விடுகின்றனர். மிகவும் கவலை கொண்ட இவர், அக்ஷணமே ஸங்கல்பம் செய்து அப்பெட்டி கிடைக்கும் வரை உபவாசம் இருப்பதாகக் கூறுகிறார். வெறும் தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்கிறார். 21 நாட்கள் தொடர் உபவாசத்தில் உள்ளார்.  அவர் சிஷ்யர் நவரத்தினாச்சாரியாருக்கு, பூஜை பெட்டி நதி தீரத்தில் இருப்பது கண்ணுக்குத் தெரிகிறது. உடனே அவர் குருவிடம் சொல்ல நதிக்கரைக்கு ஓடிப் போய் பார்க்கிறார்கள்.  ஸ்ரீ மடத்தின் அனைத்து பூஜை விக்கிரகங்கள் எல்லாம் கிடைக்கின்றன ஒரிரண்டு ஆபரணங்கள் தவிர. எல்லாவற்றையும் எடுத்து வந்து விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன!*

*ஸ்ரீ ஸத்யவர தீர்த்தருக்கு சூசனையின்படி உடல் அசௌகரியம் வரவே, பூஜை விக்கிரகங்கள் எல்லாம் கண்ணுக்கு தெரிந்த நவரத்னாச்சாரியாருக்கே, தனக்குப் பின் பீடத்தை ஏற்க யோக்யதை இருக்கிறது என்று அவருக்கு ஸ்ரீ ஸத்யதர்ம தீர்த்தர் என நாமகரணம் செய்து பீடாதீஸராக்குகிறார்.!*

*அடுத்த இரண்டு நாட்களிலிலேயே  தவவலிமையால் பூஜை விக்ரகங்களை மீட்டெடுத்த மகிழ்வோடு, ஸ்ராவண மாதம்  சுக்லபட்ச ஸப்தமி திதியன்று பிருந்தாவனஸ்தர் ஆகிறார்.!*

*ஸ்ரீ ஸத்யவர தீர்த்தரின் நாம ஸ்மரணை செய்தால் அனைத்து அனுக்ரஹங்களும் கிடைக்கும்!*

*ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து!*

*🙏🙏

No comments:

Post a Comment