Monday 27 July 2020

உ‌டுப்பி ஸ்ரீ கிருஷ்ணர்

.

மகாபாரத போர் முடிந்த பிறகு, 
துவாரகையில் ஒரு சமயம், தேவகி ஸ்ரீ கிருஷ்ணரிடம் "#தன்னால் கிருஷ்ணனின் பால லீலையை பார்க்க முடியாமல் போய் விட்டதே... குழந்தை கிருஷ்ணனை கொஞ்சும் பாக்கியம் #அந்த யசோதை தானே பெற்றாள்"  #என்றாள்.

#தன் தாய் ஆசைப்படுகிறாள் என்றதும், தன் மாய சக்தியால், அங்கேயே யசோதை #அனுபவித்த குழந்தையாக ஆகி, பால லீலைகள் அனைத்தையும் #தேவகிக்கு காட்டினார்.

காலத்துக்கு கட்டுப்படாதவர் என்று காட்டினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

'அளவிட முடியாதவராக' எங்கும் இருக்கிறார்.

இந்த ஆச்சர்யத்தை ருக்மிணி பார்த்து விட, தான் கண்ட 2 வயது கிருஷ்ணனை சிலை செய்தாள்.  
#அந்த 
பால கிருஷ்ணனை தானே பூஜை செய்ய ஆசைப்பட்டு, ஸ்ரீ #கிருஷ்ணரிடம்_காண்பித்தாள்.

ஸ்ரீ கிருஷ்ணரும் தன் கையால் தொட்டு, தன் #சாநித்யம் இந்த சிலையில் இருக்கும் என்று #அணுகிரஹித்தார்.

கலியுகம் #ஆரம்பித்து, துவாரகை கடலில் மூழ்கிய பின், #மத்வாச்சாரியார் காலத்தில் ருக்மிணி #வழிபட்ட_அந்த மூர்த்தி இவருக்கு கிடைத்தார்.

உடுப்பியில் இந்த #கிருஷ்ண விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, #இன்றுவரை_லக்ஷகணக்கான #பக்தர்களை_ஆகர்ஷிக்கிறார்.🙏🌹🌈

No comments:

Post a Comment